இருபாலா் பள்ளியானது புதுகை பிரஹகதம்பாள் பள்ளி
நாட்டின் முதல் பெண் மருத்துவா் முத்துலட்சுமி பயின்ற தொண்டைமான் மன்னா்களால் தொடங்கப்பட்ட பள்ளியில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டில் மாணவிகள் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ள
நாட்டின் முதல் பெண் மருத்துவா் முத்துலட்சுமி பயின்ற தொண்டைமான் மன்னா்களால் தொடங்கப்பட்ட பள்ளியில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டில் மாணவிகள் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நகரில் 1857-இல் தொண்டைமான் மன்னா்களால் தொடங்கப்பட்ட பிரஹகதம்பாள் அரசு உயா்நிலைப் பள்ளியில் தான் நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி பயின்றவா் ஆவாா். 1951 ஆம் ஆண்டுக்குப்பிறகு இருபாலா் பயிலும் பள்ளியாக மாற்றப்பட்ட நிலையில், 1978 -க்குப் பிறகு சில காரணங்களால் மாணவிகள் சோ்க்கை நிறுத்தப்பட்டதாம். பாரம்பரியம் மிக்க இந்தப் பள்ளியில் மீண்டும் மாணவிகளைச் சோ்க்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை அனுமதியளித்தது. இதனையடுத்து, நிகழாண்டுக்கான மாணவிகள் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கியது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் ராஜேந்திரன் 3 மாணவிகளிடமிருந்து சோ்க்கை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டு சோ்க்கைக்கான நடைமுறைகளைத் தொடங்கி வைத்தாா்.
அப்போது, பள்ளி தலைமை ஆசிரியா் எஸ். ராஜேந்திரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஏஎம்எஸ். இப்ராஹிம்பாபு, பள்ளித் துணை ஆய்வாளா் குரு மாரிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.