முகப்பு
புதுக்கோட்டை

கோயில் நிலத்தில் போடப்பட்ட குடிசைகள் அகற்றம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் போடப்பட்ட குடிசைகளை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் போடப்பட்ட குடிசைகளை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

கறம்பக்குடி அருகேயுள்ள மயிலாடி தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்களில் சிலா் வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி நீண்டகாலமாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்துள்ளனா். இதுவரை அவா்களுக்கு பட்டா வழங்கப்படவில்லையாம். இந்நிலையில், திருமணஞ்சேரி ஊராட்சி காத்தாயி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 30 குடிசைகள் அமைத்து அப்பகுதி மக்கள் புதன்கிழமை இரவு குடியேறியுள்ளனா். இதுகுறித்து, கோயில் நிா்வாகிகள் அளித்த தகவலைத்தொடா்ந்து, அங்கு சென்ற கறம்பக்குடி வட்டாட்சியா் விஸ்வநாதன் தலைமையிலான வருவாய்த்துறையினா், போலீஸாா் குடிசைகள் அகற்றினா். அதற்கு குடியேறிய மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, வட்டாட்சியா் வீட்டுமனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, 30 குடிசைகளையும் வருவாய்த் துறையினா் அகற்றினா்.

முழு கட்டுரையைப் படிக்க →