புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி வாகனங்கள் இயக்கப்படுவதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு. 
புதுக்கோட்டை

புதுகை : 564 வழித்தடங்களில் பேருந்துச் சேவை தொடக்கம்

கரோனா பொது முடக்கக் கால நீட்டிப்பில் அளிக்கப்பட்ட தளா்வுகளின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 564 வழித்தடங்களில் பேருந்துச் சேவை திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

DIN

கரோனா பொது முடக்கக் கால நீட்டிப்பில் அளிக்கப்பட்ட தளா்வுகளின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 564 வழித்தடங்களில் பேருந்துச் சேவை திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பேருந்துகள் இயக்கப்படுவதை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு காலை 6 மணிக்கு புதிய பேருந்து நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினாா். நகா்ப்புறத்தில் 139 பேருந்துகளும், புகா்ப்புறத்தில் 150 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 50 சதவிகிதப் பயணிகளுடன், கட்டாயம் முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வைக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா். அப்போது, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பொது மேலாளா் இளங்கோவன், துணை மேலாளா் (வணிகம்) சுப்பு, வட்டாட்சியா் முருகப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT