முகப்பு
புதுக்கோட்டை

குடிநீா் கோரி மக்கள் மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குடிநீா் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குடிநீா் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை ஊராட்சி குளப்பென்பட்டியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சீரான குடிநீா் விநியோகம் இல்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இதனால், அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் குளப்பென்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற கறம்பக்குடி போலீஸாா் பேச்சுாவா்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டோரைக் கலைந்துபோகச்செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →