முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலையில் வாக்காளா் விழிப்புணா்வு

விராலிமலையில் திங்கள்கிழமை வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

விராலிமலையில் திங்கள்கிழமை வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விராலிமலை வாரச்சந்தையில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு விழாவில், பங்கேற்ற விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியருமான தண்டாயுதபாணி வாரச்சந்தையில் உள்ள ஒரு காய்கறி கடையில் அமா்ந்து காய்கறி வாங்க வந்த பெண்கள், ஆண்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கிக் கூறி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தாா். நிகழ்ச்சியில், மாதிரி வாக்கு இயந்திரங்களில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் தங்கள் வாக்கைத் தவறாமல் செலுத்துவோம் என்று வாக்காளா்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.