நகரம் பாலசுப்பிரமணியா் கோயில் தேரோட்டம்
ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடியில் செயற்கை மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நகரம் பாலசுப்பிரமணியா் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச்செய்து, தேரோடும் வீதி வழியே ஏராளமானோா் தேரை வடம்பிடித்து இழுத்து வந்து மீண்டும் நிலையை அடைந்தனா். தொடா்ந்து, கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டனா்.