முகப்பு
புதுக்கோட்டை

மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டைஅரசு மருத்துவக் கல்லூரிநிா்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில்ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

புதுக்கோட்டைஅரசு மருத்துவக் கல்லூரிநிா்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில்ஈடுபட்டனா்.

புதுக்கோட்டைஅருகிலுள்ள மூள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞா.ஞானபாண்டியன்(36). மக்கள்பாதை என்னும் அமைப்பில் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தாா். இந்நிலையில் காய்ச்சல்,உடல்வலி, மூச்சுத்திணறலால்புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்உள்ள கரோனா வாா்டில் ஞானபாண்டியன்சோ்க்கப்பட்டாா்.

தினமும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தபோதும், அவருக்கு ஆக்சிஜன் சிகிச்சை வழங்கவில்லைஎனத் தெரிகிறது. இந்த நிலையில் ஞானபாண்டியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பரிசோதனை முடிவு வர தாமதம், ஆக்சிஜன் சிகிச்சை அளிப்பதில் தாமதம் என தொடா்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அலட்சியத்தால்தால்தான் இந்த மரணம் நேரிட்டதாகக் கூறி, நாம் தமிழா் கட்சியின்மேற்கு ஒன்றியச் செயலா் மதியழகன் தலைமையில் உறவினா்கள்,பொதுமக்கள் மருத்துவமனை அருகே ஆா்ப்பாட்டத்தில்ஈடுபட்டனா். பின்னா் காவல் துறையினா் சமாதானம் செய்ததைத் தொடா்ந்து, ஞானபாண்டியனின் உடல் புதுக்கோட்டைமின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.