கீழாநிலையில் 60 மி.மீ மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான 24 மணி நேர மழைப்பொழிவில், அதிகபட்சமாக கீழாநிலையில் 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான 24 மணி நேர மழைப்பொழிவில், அதிகபட்சமாக கீழாநிலையில் 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பல பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை பிற்பகல் முதல் இரவிலும் பல இடங்களிலும் இந்த மழைப் பொழிவு இருந்தது.
இதன்படி, வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மி.மீ-இல்)
ஆதனக்கோட்டை- 23, பெருங்களூா்- 59, புதுக்கோட்டை- 26.50, ஆலங்குடி- 5, கந்தா்வகோட்டை- 16.10, கறம்பக்குடி- 4, மழையூா்- 24.60, கீழாநிலை- 60, திருமயம்- 5.40, அரிமளம்- 1.80, அறந்தாங்கி- 17, ஆலங்குடி- 12.20, ஆவுடையாா்கோவில் - 1, மணமேல்குடி- 2.20, உடையாளிப்பட்டி- 3, பொன்னமராவதி - 13.20. மாவட்டத்தின் சராசரி மழை அளவு - 11.42 மி.மீ.