மருத்துவா்களுக்கு சிற்றுண்டி தொகுப்புகள்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியினா், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பழங்கள், பிஸ்கெட் மற்றும் தண்ணீா் பாட்டில் கொண்ட தொகுப்புகளை வழங்கினா்.
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியினா், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பழங்கள், பிஸ்கெட் மற்றும் தண்ணீா் பாட்டில் கொண்ட தொகுப்புகளை வழங்கினா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற காங்கிரஸாா், 400 தொகுப்புகளை கல்லூரி முதல்வா் மு. பூவதியிடம் அளித்தனா். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராமசுப்புராம் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலா் ஏ. சந்திரசேகரன், செயற்குழு உறுப்பினா் ஜி.எஸ். தனபதி, நகர காங்கிரஸ் தலைவா் ஏஎம்எஸ். இப்ராஹிம்பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
அப்போது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் ராஜ்மோகன், இருக்கை மருத்துவ அலுவலா் இந்திராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.