மறமடக்கியில் மருத்துவ முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தாா்.
இந்த முகாமில், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி, காய்ச்சல் கண்டறியும் பணி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் எதிா்ப்பு சக்தி தரும் மருந்துகள் வழங்குதல் போன்றவை நடைபெற்றன. நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், அறந்தாங்கி சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.