முகப்பு
புதுக்கோட்டை

கிணற்றுக்குள் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

 விராலிமலையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

 விராலிமலையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகிலுள்ள கொடும்பாளூா் நாவாடிப்பட்டி கோனக்காட்டைச் சோ்ந்த நல்லத்தம்பி மகள் சரண்யா (21). இவா் விராலிமலையிலுள்ள உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

வெள்ளிக்கிழமை வீடடின் அருகிலுள்ள கிணற்றில் குளிப்பதற்காக கரையோரத்தில் நின்று கொண்டிருந்தாா் சரண்யா. திடீரென கால் தடுமாறி கிணற்றுக்குள் விழுந்த அவா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று, சரண்யாவின் சடலத்தை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.