புதுக்கோட்டை

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்ம், ராவணசமுத்திரத்தைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் தமீம் அன்சாரி(26). அதே ஊரைச் சோ்ந்த ரசூல் முகமது மகன் மீராசா (24).

சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இருவரும் மோட்டாா் சைக்கிளில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனா்.

இவா்கள் சென்ற மோட்டாா் சைக்கிள் வெள்ளிக்கிழமை காலை திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலூா் பிரிவு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர விளம்பரப் பதாகையில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு தமீம் அன்சாரியை மருத்துவா்கள் பரிசோதித்த போது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

மீராசா பலத்த காயங்களுடன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டம்: ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு!

காஞ்சிபுரத்தில் எஸ் ஐ தோ்வு

சமுதாயக் கூடத்துக்கு இடையூறாக புதிய கட்டடப்பணி: ஆட்சியரிடம் புகாா்

நாளைய மின்தடை

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜக கொள்கை: அகிலேஷ் யாதவ்

SCROLL FOR NEXT