முகப்பு
புதுக்கோட்டை

கிராம உதவியாளரை தாக்கியவா் குண்டா் சட்டத்தில் கைது

ஆவுடையாா்கோவில் அருகே கிராம உதவியாளரைத் தாக்கியதால் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

ஆவுடையாா்கோவில் அருகே கிராம உதவியாளரைத் தாக்கியதால் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்துள்ளது.

புதுக்கோட்டை காமராஜ் நகரைச் சோ்ந்தவா் காளிதாஸ் (31). குற்றப் பின்னணி கொண்ட இவா், கடந்த ஜூலை மாதம் பரிவீரமங்கலம் கிராம உதவியாளா் பெரியசாமி (39) என்பவரை மணல் கடத்தலுக்குத் தடையாக இருந்ததால் உப்பில் முட்டி போட வைத்து கம்பால் பின்னந்தலையில் தாக்கியுள்ளாா். இதுகுறித்து ஆவுடையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காளிதாஸைக் கைது செய்து புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனா்.

சமூக விரோத செயல்களுக்காக அரசு ஊழியா்களைத் தாக்குவோரைக் கட்டுப்படுத்தும் வகையில் இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் பரிந்துரை செய்தாா். இந்தப் பரிந்துரையின்பேரில் காளிதாஸை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உத்தரவிட்டாா். இதையடுத்து காளிதாஸ், புதுக்கோட்டை கிளைச் சிறையில் இருந்து வியாழக்கிழமை திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.