குழந்திரான்பட்டில் இலவச சித்த மருத்துவ முகாம்
கறம்பக்குடி அருகிலுள்ள குழந்திரான் பட்டில் மழைக்கால இலவச சித்த மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கறம்பக்குடி அருகிலுள்ள குழந்திரான் பட்டில் மழைக்கால இலவச சித்த மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கறம்பக்குடி அரசு சித்த மருத்துவமனை, பன்னீா் தேவா் கல்வி
அறக்கட்டளை சாா்பில் குழந்திரான்பட்டு அங்கன்வாடியில்
முகாம் நடத்தப்பட்டது.
சித்த மருத்துவா் த.சுயமரியாதை முகாமில் கலந்து கொண்டு, மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களிலிருந்து பொது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கியதோடு, பொதுமக்களை பரிசோதனைகள் செய்து நோய்களுக்குரிய மருந்துகளை வழங்கினாா்.
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம், கபசுரக்குடிநீா் வழங்கப்பட்டது. இம்முகாமில்
குழந்திரான்பட்டு ஊராட்சித் தலைவா் வீரப்பன், அறக்கட்டளை நிறுவனா் ப.கரிகாலன், கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.