உலக முதியோா் தினகருத்தரங்கம்
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் அமைப்புகளின் தமிழ் மாநில ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், உலக முதியோா் தின விழா கருத்தரங்கம் பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் அமைப்புகளின் தமிழ் மாநில ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், உலக முதியோா் தின விழா கருத்தரங்கம் பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ரெ. ராஜகுமாரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஆா். பெரியசாமி, அரங்க. வேலாயுதம், டி.எஸ். சம்பத், பி. நீலமேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாலிபா் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் எம். ஜெயசீலன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
வயதான அனைவருக்கும் மரியாதையான வாழ்க்கை, நியாயமான ஓய்வூதியம், மருத்துவ வசதி, உத்தரவாதமான இருப்பிடம், போக்குவரத்து வசதி, முடக்கப்பட்ட அகவிலைப்படி, அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், அரசு ஊழியா் சங்க மாவட்ட பொறுப்பாளா்கள் கி. ஆளவந்தாா், கே. இளவரசன், சு. ஞானசேகரன், சி. தங்கராசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மாவட்ட பொருளாளா் ஆா். ராஜேந்திரன் வரவேற்றாா். பி. கிருஷ்ணசாமி நன்றி கூறினாா்.