புதுக்கோட்டை

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 3.63 லட்சம் உதவிகள் வழங்கல்

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் ரூ. 3.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், 15 பேருக்கு ரூ. 2.63 லட்சம் மதிப்பில் இந்த உதவிகள் வழங்கப்பட்டதுடன், சாலை விபத்தில் உயிரிழந்த மாற்றுத் திறனாளி ஒருவரின் வாரிசுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சமும் வழங்கப்பட்டது.

மக்கள் குறைகேட்பில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 418 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT