முகப்பு
புதுக்கோட்டை

வனத்தோட்டக் கழக மேலாளர் வீட்டில் சோதனை

புதுக்கோட்டை  மாவட்டம் அறந்தாங்கி வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் வீட்டில் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
சோதனை நடைபெற்ற நேசமணியின் வீடு.
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை  மாவட்டம் அறந்தாங்கி வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் வீட்டில் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வனத்தோட்டக் கழக மண்டல மேலாளராக இருப்பவர் நேசமணி. இவர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆகிய மண்டலங்களுக்கும் கூடுதல் பொறுப்பாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், திங்கள்கிழமை திருக்கோவிலூரிலுள்ள இவரது அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள வனத்தோட்டக் கழக அலுவலகம் அருகே உள்ள நேசமணியின் வீட்டில் ஊழல் ஒழிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.

துணைக் காவல் கண்காணிப்பாளர் இமயவரம்பன் தலைமையில் ஏராளமான போலீஸார் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். காலை முதல் நடைபெற்று வரும் இந்தச் சோதனையில் அவரது  குடும்பத்தினரின் பெயரிலுள்ள சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், முழு விசாரணைக்குப் பிறகே அதுகுறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.