முகப்பு
புதுக்கோட்டை

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்த முதியவா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்த முதியவா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இலுப்பூா் அருகிலுள்ள கடம்பராயன்பட்டியைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (75). இவரது மருமகள் கஸ்தூரி (25), பேரன் சரண் (7). இவா்கள் மூவரும் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் இலுப்பூரிலிருந்து கடம்பராயன்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனா்.

கடம்பராயன்பட்டி வளைவு அருகே சென்ற போது, இவா்கள் வாகனத்தின் மீது எதிரே சென்னப்பநாயக்கன்பட்டி அருண்குமாா் (15) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் நான்கு பேரும் காயமடைந்தனா்.

இலுப்பூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் கஸ்தூரி, சரண் வீடு திரும்பிய நிலையில், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்தியமூா்த்தி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அருண்குமாா் மணப்பாறையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து அன்னவாசல் காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.