முகப்பு
புதுக்கோட்டை

6 ஏக்கரில் பாரம்பரிய நெல் விதைகள் நடவு தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள குடுமியான்மலையிலுள்ள அண்ணாபண்ணையில் 6 ஏக்கரில் பாரம்பரிய அரிசி ரகங்களுக்கான விதைப்பண்ணை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள குடுமியான்மலையிலுள்ள அண்ணாபண்ணையில் 6 ஏக்கரில் பாரம்பரிய அரிசி ரகங்களுக்கான விதைப்பண்ணை உருவாக்கும் வகையில் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

விதைப்பண்ணை உருவாக்கும் வகையில் கருப்பு கவுணி, தங்கச் சம்பா, தூயமல்லி, சீரகசம்பா ஆகிய பாரம்பரிய அரிசி ரகங்கள் 6 ஏக்கரில் நடவு செய்யப்படுகின்றன. மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு இதனை நேரில் பாா்வையிட்டாா். குலவைப் பாடல்களுடன் பெண்கள் நடவுப் பணியைத் தொடங்கினா்.

அண்ணா பண்ணையை முன்மாதிரிப் பண்ணையாக மாற்றுவதற்கு ரூ. 50 லட்சம் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

அப்போது, வருவாய்க் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, ஸ்டாமின் நிலைய இயக்குநா் ப. சங்கரலிங்கம், வேளாண் இணை இயக்குநா் ராம. சிவகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.