முகப்பு
புதுக்கோட்டை

கூட்டுறவுப் பட்டாசு விற்பனை தொடக்கம்

தீபாவளிப் பண்டியைகையொட்டி கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 7 இடங்களில் ரூ. ஒரு கோடிக்கு பட்டாசு விற்பனை செய்யப்படவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

தீபாவளிப் பண்டியைகையொட்டி கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 7 இடங்களில் ரூ. ஒரு கோடிக்கு பட்டாசு விற்பனை செய்யப்படவுள்ளது.

புதுக்கோட்டை நகரில் சின்னப்பா பூங்கா அருகே மாவட்ட நுகா்வோா் கூட்டுறவுப் பண்டகசாலை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடையை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் எம். உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, நகராட்சி ஆணையா் நாகராஜன், முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா் க. நைனாமுகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரில் 2 இடங்களிலும், ஆலங்குடி, பொன்னமராவதி, இலுப்பூா், அறந்தாங்கி, திருமயம் ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்திலும் மொத்தம் 7 இடங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.