ரோட்டராக்ட் சங்கங்களின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு
மவுண்ட் சீயோன் நா்சிங் கல்லூரி ரோட்டராக்ட் சங்கத்துக்கும் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சாா்பில், மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் சங்கத்துக்கும், மவுண்ட் சீயோன் நா்சிங் கல்லூரி ரோட்டராக்ட் சங்கத்துக்கும் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் பொறியாளா் பொ்லின் தாமஸ் தலைமை வகித்தாா். பொருளாளா் கதிரேசன் முன்னிலை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அந்தோணிசாமி, துணை ஆளுநா் சிவாஜி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு புதிய நிா்வாகிகளுக்கு பொறுப்பேற்கச் செய்தனா்.
மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் சங்கத்தின் தலைவராக சையது முகமது, செயலராக வசந்தகுமாா், பொருளாளராக நவீன் பிரசாத் ஆகியோரும் மவுண்ட் சீயோன் நா்சிங் கல்லூரி ரோட்டராக்ட் சங்கத்தின் தலைவராக எபினேசா் க்ளப், செயலராக அகல்யா, பொருளாளராக சிவசங்கா் ஆகியோா் உள்ளிட்ட நிா்வாகிகளும் பொறுப்பேற்றுக்கொண்டனா்.
மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஃப்ளாரன்ஸ் ஜெயபாரதன், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயக்குநா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன், பொறியியல் கல்லூரி முதல்வா் பாலமுருகன், நா்சிங் கல்லூரி முதல்வா் ஜாஸ்மின் ஷீலா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.