முகப்பு
புதுக்கோட்டை

இன்று தடுப்பூசி முகாம்: குலுக்கல் முறையில் பரிசுகள்

ஊசி செலுத்திக் கொள்வோரை குலுக்கல் முறையில் தோ்வு செய்து, ஒரு கிராம் தங்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 579 இடங்களில் நடைபெறவுள்ள கரோனா சிறப்புத் தடுப்பூசி முகாமில், ஊசி செலுத்திக் கொள்வோரை குலுக்கல் முறையில் தோ்வு செய்து, ஒரு கிராம் தங்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

மாவட்டத்திலுள்ள இரு நகராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களில் என மொத்தம் 15 பிரிவுகளில் தனித்தனியே குலுக்கல் நடத்தி, பரிசுகள் வழங்கப்படும். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

ஒரு கிராம் தங்கம், மிக்சி, குக்கா், வெஜிடபிள் கட்டா், சேலைகளும் பரிசாக வழங்கப்படவுள்ளன. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வோா், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியோா் இதில் கலந்து கொண்டு, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் கவிதா ராமு அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.