முகப்பு
புதுக்கோட்டை

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டியிலிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டியிலிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வா் குழ. முத்துராமு தலைமை வகித்தாா். திருமயம் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் தியாகராஜன் நிகழ்வில் பங்கேற்று,

பட்டாசு வெடிக்கும்போது எவ்வாறு கவனமாக வெடிப்பது, தீப்பிடித்தால் துரிதமாகச் செயல்பட வேண்டியது குறித்தும் மாணவா்களுக்கு விளக்கிப் பேசினாா்.

கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்களும் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.