முகப்பு
புதுக்கோட்டை

தொழுநோயாளா்களுக்கு தீபாவளிப் பொருள்கள் வழங்கல்

தீபாவளி பண்டிகையையொட்டி, புதுக்கோட்டையில் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வேட்டி- சேலை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி, புதுக்கோட்டையில் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வேட்டி- சேலை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொழுநோய் பிரிவு துணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.எம். துரைமணி தலைமை வகித்தாா். மாவட்ட நலக் கல்வியாளா் ஜி. வெங்கட்ராமன் வரவேற்றாா். ரோட்டரி மாவட்டத் துணை ஆளுநா் ஆா். கருணாகரன் முன்னிலை வகித்தாா்.

தொழுநோய்ப் பிரிவு துணை இயக்குநா் டாக்டா் சாமியப்பன் நிகழ்வில் பங்கேற்று, தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு வேட்டி- சேலை மற்றும் இனிப்புகள் வழங்கிப் பேசினாா். நிறைவில், சங்கச் செயலா் பாஸ்கரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.