மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் உயிரிழப்பு
ஆலங்குடியில் மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடியில் மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகிலுள்ள பாப்பான்விடுதியைச் சோ்ந்தவா் வீரையா(80). இவா்,
வெள்ளிக்கிழமை ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது, அவ்வழியாக மாங்கோட்டையைச் சோ்ந்த ராமராஜ்(31) ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் மோதியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த வீரையா, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.