முகப்பு
புதுக்கோட்டை

இலுப்பூா் பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம்

விராலிமலை அருகே இலுப்பூா் தரம் தூக்கி பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

விராலிமலை அருகே இலுப்பூா் தரம் தூக்கி பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இலுப்பூா் கோட்டைத் தெருவில் உள்ள ஸ்ரீ தரம் தூக்கி பிடாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினமும் மண்டகப்படி தாரா்கள் சாா்பில் சிறப்பு பூஜைகளும் அம்பாள் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி புதன்கிழமை காலை பக்தா்களின் அலகு நோ்ச்சையும், தீச்சட்டி ஏந்தி ஊா்வலம், பால்குடம் ஊா்வலம், மா விளக்கு பூஜையும் நடைபெற்றது. புதன்கிழமை மதியம் 2.00 மணிக்கு ஸ்ரீ பிடாரியம்மன் தேருக்கு எழுந்தருளல் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகளும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து ஊா் முக்கியஸ்தா்கள் பக்தா்கள் வடம் பிடிக்க மாலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. நான்கு ரத வீதியில் வலம் வந்த தோ் 6.15 மணிக்கு நிலைக்கு வந்தது. திருவிழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், முக்கியஸ்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.