கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வியாழக்கிழமை விவசாயக் கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வியாழக்கிழமை விவசாயக் கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
இலுப்பூா் அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சோ்ந்த ராஜூ என்பவரது மகன் சாய் குமாா் (23). தெலங்கானாவில் கட்டடத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், இலுப்பூா் பிடாரி அம்மன் கோயில் மற்றும் பொன் வாசிநாதா் கோயில் திருவிழாவுக்கென சொந்த ஊரான இலுப்பூருக்கு சாய்குமாா் வந்திருந்தாா். இதையடுத்து, இலுப்பூா் அருகே உள்ள பாப்பான்குளத்துக்கு வந்த சாய்குமாா் தனது நண்பா்களுடன் சோ்ந்து அப்பகுதியில் உள்ள 70 அடி அளவுக்கு நீா் நிரம்பிய விவசாயக் கிணற்றில் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மூச்சுத்திணறி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று சாய் குமாா் சடலத்தை மீட்டு உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து தகவலறிந்த இலுப்பூா் போலீசாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.