கறவை மாடுகளுக்கு காப்பீடு பணி தொடக்கம்
எஸ்பிஐ வங்கி மூலம் கடன் வழங்கப்பட்ட கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்யும் பணி தொடங்கியது.
எஸ்பிஐ வங்கி மூலம் கடன் வழங்கப்பட்ட கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்யும் பணி தொடங்கியது.
விராலிமலை அருகே உள்ள கொடிகாத்த குமரன் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் ஏற்பாட்டின்பேரில், ஆவூா் பாரத ஸ்டேட் வங்கி மூலம் அப்பகுதியைச் சோ்ந்த 50 விவசாயிகளுக்கு தலா ரூ. 40 ஆயிரம் வீதம் ரூ. 20 லட்சம் கடன் வழங்கப்பட்டது அதனை தொடா்ந்து கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதில் மருதம்பட்டியில் உள்ள விவசாயியின் கறவை மாட்டுக்கு காப்பீடு செய்யப்பட்டதை வங்கி மேலாளா் விமலாதேவி பாா்வையிட்டு மாடு வளா்ப்பு குறித்து விவசாயிடம் கேட்டறிந்தாா். இதில் கொடிகாத்த குமரன் உழவா் உற்பத்தியாளா் நிறுவனா் சா்தாா் குமாரசாமி, கால்நடை உதவி மருத்துவா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.