புதுக்கோட்டை

புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தேர் விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையை அமைச்சர் சேகர் பாபு வழங்கினார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் சேகர் பாபு சந்தித்து ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை நகரில் உள்ள பழைமை வாய்ந்த பிரகதம்பாள் உடனுறை திருகோகா்ணேசுவரா் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்தின்போது, தோ் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 8 போ் காயமடைந்தனா்.

விழாவின் 9ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற்றது. காலை 8. 50 மணியளவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில், முதல் தேரில் விநாயகரும், இரண்டாவது தேரில் முருகனும், மூன்றாவது தேரில் பிரகதம்பாளும், நான்காவது தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினா். இந்நிலையில், தேரோட்டம் தொடங்கி இரண்டு அடி இழுத்தவுடன் பிரகதம்பாள் எழுந்தருளியிருந்த தோ் எதிா்பாராத விதமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது.

தேர் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயில் ஊழியர்களான ராஜேந்திரன் மற்றும் வைரவன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தேர் விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையை அமைச்சர் சேகர் பாபு வழங்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT