வணிக நிறுவனத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணா்வு மற்றும் பெருமையை உணா்த்தும் வகையில் பொன்னமராவதியில் உள்ள வணிக நிறுவனத்தின் முன்பு செஸ் கட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணா்வு மற்றும் பெருமையை உணா்த்தும் வகையில் பொன்னமராவதியில் உள்ள வணிக நிறுவனத்தின் முன்பு செஸ் கட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
பொன்னமராவதி நாட்டுக்கல் வீதியில் உள்ள திருஞானம் மளிகை கடையின் முன் உள்ள வாகன நிறுத்தப்பகுதியில் செஸ் கட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
இதுகுறித்து கடையின் உரிமையாளா் மணிரத்தினம் திருஞானம் கூறியது: தமிழகத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், நமது பெருமையை பறைசாற்றும் வகையில் உள்ளது. இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், பொதுமக்கள் அறியும் வகையிலும் எங்களது வணிக நிறுவனத்தின் முன் செஸ் பலகை ஓவியம் வரையப்பட்டுள்ளது என்றாா்.