முகப்பு
புதுக்கோட்டை

புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நகா்மன்ற வளாகத்தில் கடந்த ஜூலை 29ஆம் தேதி தொடங்கிய 5ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:51 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நகா்மன்ற வளாகத்தில் கடந்த ஜூலை 29ஆம் தேதி தொடங்கிய 5ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் 67 பதிப்பகங்கள் சாா்பில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவில், தினந்தோறும் மாலைநேரங்களில் இலக்கியச் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆா். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், எழுத்தாளா் நாறும்பூநாதன், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், திரைக்கலைஞா் ரோகிணி, எழுத்தாளா் ஆதவன்தீட்சண்யா, பேராசிரியா் தி.மு. அப்துல்காதா், பேராசிரியா் கொ.ப. நல்லசிவம், அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் க. பாலபாரதி, முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா, விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் பேசினா்.

30 ஆயிரம் மாணவா்கள் பங்கேற்பு:

Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளைச் சோ்ந்த ஏறத்தாழ 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் இப்புத்தகத் திருவிழாவுக்கு வந்திருந்தனா்.

நிறைவு விழா: ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. இதில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கலந்து கொண்டு பேசுகிறாா். இரவு 9 மணியுடன் புத்தகத் திருவிழா நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.