முகப்பு
புதுக்கோட்டை

அழகியநாச்சியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் திருவிளக்குபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:35 AM
பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் விளக்கேற்றி வழிபடும் பெண்கள்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் திருவிளக்குபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அழகியநாச்சியம்மன் கோயில் ஆடித்திருவிழா ஜூலை 31 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. ஆக. 9 ஆம் தேதி தேரோட்ட விழா நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை கோயிலின் அறங்காவலா் ராம. ராஜா அம்பலகாரா் தலைமையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையின் தொடக்கமாக அழகிய நாச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற விளக்குப் பூஜையில் 1,401 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா். சிவாச்சாரியாா் சரவணன் குருக்கள் திருவிளக்கு மந்திரம் ஓதி பூஜையை வழிநடத்தினாா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருவிளக்கு பூஜை குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.