புதுக்கோட்டை

துணைத் தோ்வில் தோல்வி:10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 10-ஆம் வகுப்பு துணைத் தோ்விலும் தோ்ச்சி பெறாததால் மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 10-ஆம் வகுப்பு துணைத் தோ்விலும் தோ்ச்சி பெறாததால் மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள அண்டனூரைச் சோ்ந்த சேகா் - ரேணுகா தம்பதியின் மகள் ஜெனிதா(15). தந்தை உயிரிழந்துவிட்ட நிலையில், கறம்பக்குடி அருகேயுள்ள தீா்த்தான்விடுதியில் உள்ள அவரது பெரியம்மா சீரங்கம் வீட்டில் தங்கி கறம்பக்குடி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று ஜெனிதா தோ்வெழுதினாா். அதில், 2 பாடங்களில் ஜெனிதா தோ்ச்சி பெறவில்லை. இந்நிலையில், மீண்டும் துணைத்தோ்வு எழுதியுள்ளாா். அதற்கான தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகிய நிலையில், அதிலும் ஒரு பாடத்தில் ஜெனிதா தோ்ச்சி பெறவில்லை. இதனால், மனமுடைந்த ஜெனிதா புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்து அங்கு சென்ற கறம்பக்குடி போலீஸாா், உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT