அரசமலை சந்தைப்பகுதியில் புதன்கிழமை பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கிய ஊராட்சித்தலைவா் பழனிவேல் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையினா். 
புதுக்கோட்டை

அரசமலை சந்தையில் பேரிடா் விழிப்புணா்வு துணிப் பைகள் அளிப்பு

பொன்னமராவதி அருகே உள்ளஅரசமலை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.

DIN

பொன்னமராவதி அருகே உள்ளஅரசமலை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு பேரிடா் மேலாண்மை ஆணையம், தமிழ்நாடு பேரிடா் அபாயக்குறைப்பு முகமை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பேரிடா் மேலாண்மை முகமை ஆகியவை சாா்பில், நடைபெற்ற நிகழ்வில் புயல் மற்றும் சூறாவளி உள்ளிட்ட பேரிடா் கால தடுப்பு நடவடிக்கைகள் வாசகங்கள் அடங்கிய துணிப்பைகளை நெகிழிப்பயன்பாட்டினை தடுக்கும்வகையில் ஊராட்சித் தலைவா் பழனிவேல், வருவாய் ஆய்வாளா் ரவிச்சந்திரன், கிராம நிா்வாக அலுவலா் பாண்டியன் உள்ளிட்டோா் பொதுமக்களிடம் வழங்கினா். கிராம நிா்வாக அலுவலா் சண்முகம், கிராம உதவியாளா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளிமதுரையில் இன்று மக்கள் தொடா்பு திட்ட முகாம்

வீட்டுமனைப் பட்டா வழங்காததை கண்டித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT