அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கிராம நிா்வாக உதவியாளா் பலி
அன்னவாசல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கிராம நிா்வாக உதவியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
அன்னவாசல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கிராம நிா்வாக உதவியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கடம்பராயன்பட்டியை சோ்ந்தவா் கருப்பையா (50). இவா், மதியநல்லூா் கிராம நிா்வாக உதவியாளராக பணியாற்றி வந்தாா். வெள்ளிக்கிழமை திருநல்லூரில் (தென்னலூா்) நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு வருவாய்த்துறை சாா்பிலான பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அன்னவாசல் சென்னப்பநாயக்கன்பட்டி அருகே அவா் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற அன்னவாசல் போலீஸாா், கருப்பையாவின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.