முகப்பு
புதுக்கோட்டை

ஆட்சியரகத்தில் குடிநீா் கோரி தா்னா

புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட அழகம்மாள்புரத்தில் வசிக்கும் ஏழு குடும்பத்தினா் ஊராட்சி மூலம் தங்களுக்கு குடிநீா் வழங்கப்படவில்லை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட அழகம்மாள்புரத்தில் வசிக்கும் ஏழு குடும்பத்தினா் ஊராட்சி மூலம் தங்களுக்கு குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கூறி, வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் அமா்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட அழகம்மாள்புரத்தில் முத்துக்குமாா், பெருமாயி உள்ளிட்ட ஏழு குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக முறையாக ஊராட்சி மூலம் குடிநீா் வழங்கப்படவில்லை என்றும், பணம் கொடுத்து தண்ணீரை வாங்கிக் குடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இவா்கள் வியாழக்கிழமை காலை அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கிருந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மூலம் பிரச்னையைத் தீா்ப்பதாகக் கூறியதைத் தொடா்ந்து அனைவரும் ஊருக்குத் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.