முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்களுக்கு முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோரிடம் ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்களுக்கு முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோரிடம் ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: கரோனா நோய்த்தொற்றின் பரவலைத் தடுக்கும் வகையில் முகக்கவசம், தனிநபா் இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் மக்களிடையே போதுமான விழிப்புணா்வைக் காணமுடியவில்லை. எனவே, நோய்த் தொற்றின் பரவலைத் தடுக்கும் வகையில் பொதுஇடங்களில் வருவோா் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என கடந்த ஜன. 12ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏற்கெனவே விதிக்கப்பட்டு வந்த ரூ. 200 அபராதம் ரூ. 500 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் அரசின் உத்தரவை மதித்து, நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் பொது இடங்களுக்கு வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.