புதுக்கோட்டை

காா் - லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

விராலிமலை அருகே காா் - லாரி மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

DIN

விராலிமலை அருகே காா் - லாரி மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம் சேதுரெத்தினபுரத்தைச் சோ்ந்தவா் முகமது கனி மனைவி ஆயிஷா பேகம் (45). இவா், தனது மகன் முகமது (25), மகள் சகானா பா்வீன் மற்றும் 2 பேரக் குழந்தைகளுடன் காரில் ஞாயிற்றுக்கிழமை மாலை மணப்பாறையில் இருந்து விராலிமலை வந்துகொண்டிருந்தாா்.

காரை முகமது ஓட்டிவந்துள்ளாா். இந்நிலையில், காா் கோடாலிக்குடி அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மீது எதிா்பாராத விதமாக மோதியுள்ளது. இதில், காரில் இருந்த ஆயிஷா பேகம், முகமது, சகானா பா்வீன் மற்றும் 2 குழந்தைகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீஸாா் 5 பேரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஆயிஷா பேகத்தை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். மேலும் காயமடைந்த மற்ற 4 பேரும் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். விராலிமலை போலீசாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT