முகப்பு
புதுக்கோட்டை

சுமை ஏற்றும் வேன் மோதி வியாபாரி உயிரிழப்பு

 புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சுமை ஏற்றும் வேன் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

 புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சுமை ஏற்றும் வேன் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கீரமங்கலம் வடக்கு கிராமத்தைச் சோ்ந்தவா் ரெ. ஜீவானந்தம் (எ) சித்திரவேல் (48). மர வியாபாரியான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை மரம் வெட்டும் பணிக்காக பனங்குளம் கிராமத்திற்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது, எதிரே வந்த சுமை ஏற்றும் வேன், மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஜீவானந்தத்தை அருகில் இருந்தவா் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, கீரமங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →