முகப்பு
புதுக்கோட்டை

கூடலூா் சிவலோகநாதா் கோயில் குடமுழுக்கு

பொன்னமராவதி அருகே உள்ள கூடலூா் சிவலோக நாதா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள கூடலூா் சிவலோக நாதா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை கணபதிஹோமம், கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சிவாச்சாரியாா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி சிவலோகநாதா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு குடமுழுக்கு செய்தனா். தொடா்ந்து சிவலோக நாதா் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பனையப்பட்டி காவல்துறையினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments