முகப்பு
புதுக்கோட்டை

நகரம் பாலசுப்பிரமணியா் கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள நகரம் பாலசுப்பிரமணியா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள நகரம் பாலசுப்பிரமணியா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கீரமங்கலம் அருகேயுள்ள நகரம் கிராமத்தில் செயற்கை மழையில் அமைந்துள்ள பாலசுப்பிரணியா் கோயில் திருவிழா கடந்தவாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை எழுந்தருளச்செய்து தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோா் தேரை வடம் பிடித்து இழுத்து வந்து நிலையை அடைந்தனா். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →