சி. ராமச்சந்திரன் 
புதுக்கோட்டை

காலமானார்: சி. ராமச்சந்திரன்

புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகத்தின் துணைத் தலைவர் வல்லத்திராக்கோட்டையைச் சேர்ந்த சின்னையா மகன் சி. ராமச்சந்திரன் (90), வயது முதிர்வால் இன்று(மார்ச் 17) காலையில் காலமானார்.

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகத்தின் துணைத் தலைவர் வல்லத்திராக்கோட்டையைச் சேர்ந்த சின்னையா மகன் சி. ராமச்சந்திரன் (90), வயது முதிர்வால் இன்று(மார்ச் 17) காலையில் காலமானார்.

புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநர், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தின் இயக்குநர், பால் கூட்டுறவு ஒன்றியத்தின் இயக்குநர், புதுக்கோட்டை திருக்கோயில்கள் அறங்காவலர், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர், திருவரங்கும் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், வல்லத்திராக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், மாவட்ட கம்பன் கழகத்தின் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

இவருக்கு புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகத்தின் செயலர் இரா.சம்பத்குமார், இரா.செல்வகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இரா.சுரேஷ்குமார், சாய்ராம் குழும ஒருங்கிணைப்பாளர் இரா.சதீஷ்குமார் ஆகிய மகன்கள் உள்ளனர்.

இறுதிச் சடங்குகள் நாளை (மார்ச் 18, வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வல்லத்திராக்கோட்டையில் நடைபெறுகின்றன. தொடர்புக்கு-9443190405.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூா் திருக்கையில் திமுக வாக்குச் சாவடி கூட்டம்

விசிகவினா் ஆா்ப்பாட்டம்

17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பெண் கைது

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணிகள் ஆய்வு

கட்டுப்பாட்டை இழந்த காா் ஏரியில் பாய்ந்து விபத்து

SCROLL FOR NEXT