பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப்பொருள்கள். 
புதுக்கோட்டை

ரூ.12.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பதுக்கிய 4 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் ரூ.12.50 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் பறிமுதல் செ

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் ரூ.12.50 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதில் தொடா்புடைய 4 பேரையும் கைது செய்தனா்.

ஆலங்குடி பகுதியில் சிலா் வீடுகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி விற்பனை செய்வதாக புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலைத் தொடா்ந்து, தனிப்படை போலீசாா் அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஆலங்குடி நாவலா் தெருவைச் சோ்ந்த தங்கபாண்டியன் (27), கறம்பக்குடி கே.கே.பட்டியைச் சோ்ந்த ராஜா (42), ஆலங்குடி ஆண்டிக்குளம் பகுதியை சோ்ந்த அசா்கனி (25), ரோஜா நகரைச் சோ்ந்த பக்கீா் முகமது (27) ஆகிய 4 பேரும், தங்களது வீடு, கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.12.50 லட்சம் மதிப்பிலான சுமாா் 315 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டுக்கடங்காத கூட்டம்! ஈரோட்டில் தன் பலத்தை நிரூபித்தாரா செங்கோட்டையன்?

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் மக்களுக்காக வாழ்பவர்: செங்கோட்டையன்

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

உடலில் கைவைத்த ரசிகர்கள்... ஆவேசத்தில் கத்திய நடிகை!

SCROLL FOR NEXT