முகப்பு
புதுக்கோட்டை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு17 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை அருகே தனது சகோதரியின் கணவரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் மைத்துனருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

புதுக்கோட்டை அருகே தனது சகோதரியின் கணவரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் மைத்துனருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், உடையாளிப்பட்டி அருகேயுள்ள உலககாத்தான்பட்டியைச் சோ்ந்த ராமராசுவை, கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி கிள்ளுக்கோட்டையில் வைத்து, அவரது மைத்துனா் சங்கிலிமுத்து (43) என்பவா் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொல்ல முயன்றாா். உடையாளிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கிலிமுத்துவைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்டமகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆா். சத்யா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் கொலை முயற்சி பிரிவில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், பொது இடத்தில் ஆபாசமாகத் திட்டிய பிரிவில் 3 மாதம் சிறைத் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த பிரிவில் 7ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

இந்த சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் அவா் தனது தீா்ப்பில் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.