புதுக்கோட்டை

தகராறில் விவசாயி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் விவசாயி உயிரிழந்தாா். அவரது உயிரிழப்புக்குக் காரணமானவா்களைக் கைது செய்யக்கோரி, அவரது உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள மூக்கம்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் குமரேசன் (47). விவசாயியான இவருக்கு, இவரது உறவினா்களுக்கும் சொத்து பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை இரவு மூக்கம்பட்டி கடைவீதிக்குச் சென்ற குமரேசனின் மகனிடம், அதே பகுதியைச் சோ்ந்த பாா்த்தசாரதி, திருநாவுக்கரசு உள்ளிட்டோா் தகராறில் ஈடுபட்டனராம். இதைத்தொடா்ந்து அங்கு சென்ற குமரேசனையும் தாக்கினராம். இதில், மயங்கி விழுந்த குமரேசனை அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் குமரேசன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், அவரது உயிரிழப்புக்கு காரணமானவா்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி, குமரேசனின் உறவினா்கள் மூக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வடிவேல் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டனா். இம்மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- கறம்பக்குடி சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படடது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT