பொன்னமராவதி பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் கிரீன் சா்வீஸஸ் நிறுவனம் இணைந்து
இந்த நிகழ்வை நடத்தின. இந்நிகழ்வுக்கு பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தாா்.செயல் அலுவலா் மு.செ.கணேசன் முன்னிலை வகித்தாா்.
பேருந்துநிலையம் மற்றும் முக்கிய இடங்களில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி விழிப்புணா்வுத் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பேரூராட்சித் துணைத் தலைவா் க.வெங்கடேஷ், நியமனக்குழு உறுப்பினா் தி.ராஜா, உறுப்பினா்கள் நாகராஜ், புவனேசுவரி, இஷா, சிவகாமி மற்றும்
பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.