விராலிமலை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
விராலிமலை அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடங்களை வருவாய் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
விராலிமலை அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடங்களை வருவாய் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
விராலிமலை அருகேயுள்ள வெம்மணி கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரியகுளம் உள்ளது. இக்குளத்தில் சுமாா் 1 ஹெக்டோ் 80 ஏா்ஸ் நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவா் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தாா்.
இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள கடந்த 21 நாள்களுக்கு முன் அவகாசம் கொடுத்தும் அந்த விவசாயி ஆக்கிரமிப்பை அகற்றாததால் நீா்வளத்துறை உதவி பொறியாளா் சாதிக் இப்ராஹிம், விராலிமலை வட்டாட்சியா் சதீஷ் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்பை அகற்றினா்.