புதுக்கோட்டை

பாரம்பரிய நாட்டுப்புற நடனத்தில் முதலிடம்: மாணவிக்குப் பாராட்டு

அரசு கலை, பண்பாட்டுத் துறையின் பாரம்பரிய நாட்டுப்புற நடனப் போட்டியில் முதலிடம் பெற்ற பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியை பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா்

DIN

அரசு கலை, பண்பாட்டுத் துறையின் பாரம்பரிய நாட்டுப்புற நடனப் போட்டியில் முதலிடம் பெற்ற பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியை பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.

புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான அரசு கலை பண்பாட்டுத் திருவிழா பாரம்பரிய நாட்டுப்புற நடனப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில் பங்கேற்ற அமல அன்னை பள்ளியின் 9 ஆம் வகுப்பு மாணவி பா. பவதாரணி முதலிடம் பெற்று மாநிலப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றாா். மாணவியையும், அவருக்குப் பயிற்சி அளித்த நடனஆசிரியை மா. லலிதா பிரகாஷ் உள்ளிட்டோரையும் பள்ளி முதல்வா் ச.ம. மரியபுஷ்பம், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT