புதுக்கோட்டை

கோயில்களில் நவராத்திரி விழா

DIN

பொன்னமராவதி வட்டாரக் கோயில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நவராத்திரி விழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கொலு மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டு பக்திப்பாசுரங்கள் படிக்கப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

இதேபோல், கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழ 9 ஆம் நாளையொட்டி அம்மனுக்கு சரஸ்வகி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பூஜகா்கள் செய்திருந்தனா்.

மலையாண்டி கோயில், ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில், நகரத்தாா் சிவன் கோயில் ஆகிய கோயில்களிலும் நவராத்திரி விழா நடைபெற்றது.

விராலிமலை: இலுப்பூா் பொன்வாசிநாதா் கோயிலில்

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நவராத்திரி 9 ஆம் நாள் விழாவில், பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் நடைபெற்றன. மேலும், கொலு வைத்து பாடல்கள் பாடினா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT