மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
குஜராத் பாஜக அரசைக் கண்டித்து, புதுக்கோட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்கில், 11 குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் பாஜக அரசைக் கண்டித்து, புதுக்கோட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாதா் சங்கம் மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி தலைமை வகித்தாா். கோரிக்கைளை விளக்கி மாவட்டச் செயலா் பி. சுசீலா, மாநிலக் குழு உறுப்பினா் டி. சலோமி, மாவட்டப் பொருளாளா் ஜெ. வைகைராணி உள்ளிட்டோா் பேசினா்.
பில்கிஸ் வழக்கில் குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்த குஜராத் பாஜக அரசை கண்டித்தும், பாஜக ஆளும் மாநிலங்களில் தொடா்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.